Wednesday, November 16, 2011

பொய் செய்தி:ஈரானில் பி.பி.சி நிருபர் கைது


டெஹ்ரான்:ஈரானுக்கு எதிரான செய்திகளை அளிப்பதாக குற்றம் சாட்டி ஈரானின் ரகசிய புலனாய்வு பிரிவு பி.பி.சி உள்ளூர் நிரூபரை கைதுச்செய்துள்ளது.பி.பி.சியின் பார்ஸி மொழி பதிப்பிற்காக ரகசியமாக செயல்பட்டுவந்த ஹஸன் ஃபாத்தி என்பவர்தாம் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.இதுக்குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஈரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் நியூஸ் கூறுவதாவது:ஹஸன் ஃபாத்தி ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான போலியான செய்திகளை பரப்புரைச்செய்து பொதுமக்களின் அபிப்ராயத்தை நாட்டிற்கு எதிராக மாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஈரானின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் போலியான செய்திகளையும், வீடியோக்களையும் பி.பி.சி வழியாக பிரசுரித்ததற்கு ஒரு பெண் உள்பட 6 பேர் கடந்த செப்டம்பரில் கைதுச்செய்யப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து, பி.பி.சியுடன் ஒத்துழைக்க கூடாது என ஈரான் குடிமக்களுக்கு அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சிதான் ஃபாத்தியின் கைது.மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து ஈரானை தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் ஈரான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இச்சம்பவம் மூலமாக நாட்டில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படும் என கருதப்படுகிறது.ஈரானுக்கு எதிரான செய்திகளை வெளியிட நாட்டின் குடிமக்களுக்கு பி.பி.சி பெருமளவில் பண உதவிச்செய்வதாக டெஹ்ரான் டைம்ஸ் கூறுகிறது.
source-online thoothu

0 comments:

Post a Comment