Thursday, November 24, 2011

புஷ், பிளேயர் யுத்தக் குற்றவாளிகள் - மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு



அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதி‍கள் குழு தீர்ப்பளித்துள்ளது. கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.  

இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடுத்தனர். விசாரணைகளின் பின் சுமார் நான்கு மணித்தியாலங்களின் கழித்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

டொனி பிளேயர் மற்றும் ஜோர்ஜ் புஷ் மீது ஈராக் யுத்தத்தில் சர்வதேச சட்டத்தை மீறியமை, துரோகம், 2003 படையெடுப்பு மூலம் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

புஷ் மற்றும் அவருக்கு கீழ் செயல்பட்ட 7 முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment