ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை, பசிபிக் கடலில் அமெரிக்கா சோதித்து பார்த்துள்ளது. அட்வான்ஸ்டு ஹைபர்சோனிக் வெபன் எனப்படும் அந்த ஏவுகணை, கவாய் பகுதியில் உள்ள ஏவுகணை சோதனை தளத்தில் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 3700 கி.மீ., தூரத்தை அரைமணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடைந்ததாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் மெலின்டா மோர்கான் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஏவுகனை பரிசோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
source-yarlmuslim
0 comments:
Post a Comment