Wednesday, November 23, 2011

ஈரானுக்கெதிரான புதிய தடைகள்


அணுத்திட்ட சர்ச்சைகள் காரணமாக ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை மேற்குலக நாடுகள் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனாடா ஆகிய நாடுகள் இந்த தடைகளை விதித்துள்ளன. 

ஈரான் மீது கணிசமான அழுத்தம்  பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அனைத்து வங்கிகள் உடனான உறவுகளையும் துண்டிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளதுடன், பெற்றோலிய இராசாயனம், எண்ணெய் மற்றும் வாயு தொழிற்துறைகளுடன் தொடர்புடைய ஏற்றுமதிகளுக்கு கனடா தடைவிதித்துள்ளது. 

அணு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள ஈரான் முயற்சிப்பதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ள போதிலும், ஈரான் அதனை நிராகரித்துள்ளது. தமது அணுத்திட்டங்கள் சிவிலியன்களின் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் ஈரான் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் அணுத்திட்டங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் தீர்மானம் கொண்டுவருவதற்கு அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. 

0 comments:

Post a Comment