ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளைகுடா நாடான ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினை மறைமுகமாக நிறைவேற்றி வருவதாகவும் இதற்காக யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையும் ஈரானை எச்சரித்துள்ளது. ஐ.நா.விலும் ஈரான் மீது தடைவிதிக்க பரிசீலித்துவருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வாராந்திர மந்திரிசபை கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ கலந்து கொண்டு பேசுகையில், ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும், ஐ.நா. , சர்வதேச சமூகம் ஆகியன அணுஆயுத திட்டத்தை நிறுத்துமறு ஈரானை வலியுறுத்த வேண்டும். சர்வதேச அணுசக்தி முகமை மீண்டும் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தீவிர கண்காணிக்க வேண்டும். ஈரானின் இந்த செயல் சர்வதேச சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். என்றார்.
sources-yarlmuslim......
0 comments:
Post a Comment