Wednesday, November 23, 2011

பாகிஸ்தானில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோவில் இந்துகளிடம் ஒப்படைப்பு -நீதிமன்றம்


'பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.




இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்

0 comments:

Post a Comment