Wednesday, January 2, 2013

ராணுவத்தின் அநியாய துப்பாக்கிச்சூடு: கஷ்மீர் முழு அடைப்புக்கு மக்கள் பூரண ஆதரவு!

1 Jan 2013                      hutdown in Kashmir
 
     ஸ்ரீநகர்:கஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவம் நடத்திய அநீதமான துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, பல்வேறு கஷ்மீர் அமைப்புகள் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் பூரண ஆதரவை அளித்தனர்.
 
    தெற்கு கஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் போராளிகளுக்கும், போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இடையே கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த போராளிகள் மற்றும் ராணுவத்தினர் 4 பேரை ஏற்றிக் கொண்டு, பாதுகாப்பு படையினர் வந்தபோது அந்த வாகனத்தை உள்ளூர்வாசிகள் வழிமறித்தனர்.
 
    இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் பாதுகாப்புப் படையினர் சிலரும் காயமடைந்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, புல்வாமாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
 
     இதனிடையே, துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கஷ்மீர் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு, கஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால், புல்வாமா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நான்காவது நாளாக திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.
 
     முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, ஸ்ரீநகர் மற்றும் பிற பகுதிகளில் திங்கள்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கண்டித்துள்ளது.
 
     இதுதொடர்பாக,அக்கட்சியின் தலைவர்கள் நயீம் அக்தார், செய்யது அல்தாஃப், முஹம்மது கலீல் பந்த் மற்றும் செய்யது பஷீர் அஹ்மது ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு கூறியிருப்பது:
 
     புல்வாமா சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது, அற்ப குற்றச்சாட்டுகளை சுமத்தி, போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
     புல்வாமா சம்பவத்தை தேசிய மாநாட்டுக் கட்சியும் கண்டித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் விடுத்துள்ள அறிக்கையில், பத்ரிபால், மேக்சில் போலி எண்கவுன்டர் சம்பவங்கள் போன்ற முந்தைய தவறுகளில் இருந்து, ராணுவம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.ராணுவம் இந்த நாட்டுக்கு வெற்றிமாலையை பெற்றுத்தர வேண்டுமே தவிர, இதுபோன்ற தவறுகளை இழைக்க கூடாது. நீங்கள் செய்யும் ஒரு தவறு, இந்த மாநிலத்தையே கொந்தளிக்கச் செய்துவிடும். புல்வாமா சம்பவத்தை தேசிய மாநாட்டுக் கட்சி கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நன்றி, தூது

0 comments:

Post a Comment