Wednesday, January 2, 2013

பலதாரமணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது! ஆனால் ஊக்கமளிக்கவில்லை – டெல்லி உயர்நீதிமன்றம்!

2 Jan 2013 Holy Quran allows polygamy, not encourages it -Delhi court
 
     புதுடெல்லி:பலதார மணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. எனினும் அதற்கு ஒருபோதும் ஊக்கமளிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே திருமணமான நபருக்கு 2-வதாக ஒரு பெண்ணை கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சித்த வழக்கில் கைதான மவ்லவி முஸ்தஃபா ராஜா என்பவரின் முன் ஜாமீனை ரத்துச் செய்து தீர்ப்பளிக்கையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
 
     நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் என்று திருக்குர்ஆன் கூறுவதாக தெரிவித்த மவ்லவியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தைகளை பாதுகாக்கும் திறன் இல்லாமை, சுகவீனமோ அல்லது இதர காரணங்களோ போன்ற சூழ்நிலைகளில்தான் இஸ்லாமிய நாடுகளில் கூட 2-வது திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், எங்கும் பலதார மணத்தை ஊக்கமளிக்கும் வழக்கம் இல்லை என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கமினி லவு கூறினார்.
 
     கடந்த ஆண்டு இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. மனைவியின் அனுமதியில்லாமல் நதீம் கான் என்பவருக்கு டெல்லியைச் சார்ந்த பெண்மணியை திருமணம் செய்து வைக்க துணை புரிந்தார் என்பது மவ்லவி மீதான அரசு தரப்பு வழக்காகும். நன்றி, தூது

0 comments:

Post a Comment