Wednesday, January 2, 2013

சென்னையில் "வக்ப்" சொத்தில் "இஸ்ரேலிய" நிறுவனம் : துணை போகும் நிர்வாகம்!

     Jan2, சென்னை அண்ணா சாலையின் முக்கியப்பகுதியில் "வக்ப் வாரியத்துக்கு சொந்தமான" ஷியா முஸ்லிம்களின் பராமரிப்பில் உள்ள இடத்தில், இஸ்ரேலிய நிறுவனமான "மெக் டோனால்ட்" பல மாடிக்கட்டிடம் கட்டிவருகிறது.

    இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேலிய கம்பெனிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில், ஈரானின் "ஆயதுல்லாஹ் கொமைனி" உள்ளிட்ட எல்லா "ஷியா" முஸ்லிம் தலைவர்களும் ஒத்தக்கருத்தை கொண்டுள்ள நிலையில், வக்புக்கு சொந்தமான இடத்தை "மெக் டோனால்ட்" நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆயிரம் விளக்கு அறக்கட்டளையின் (Thousand Lights Charity) பராமரிப்பில், சென்னையின் மையப்பகுதியில் உள்ள 1 ஏக்கர் நிலப்பரப்பு லீசுக்கு விடப்பட்டுள்ளது.

     இதில், இஸ்ரேலிய நிறுவனமான "மெக் டோனால்ட்" கட்டிடம் கட் டுவதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து "வக்ப் வாரியம்" கட்டிடப்பணிகளுக்கு தடை விதித்துள்ளது. என்றாலும், பணிகள் வேகமாக நடந்துவருகிறது.

     சென்னையில் உள்ள ஷியா முஸ்லிம் மக்கள் கூறுகையில்: இறைவழியில் கொல்லப்பட்டவரின் (சர்கார் அப்பாஸ் ஆஷூர் கானா இமாம் பாடா) பெயரில் செயல்படும் அறக்கட்டளை சொத்தை, கொலைகாரர்களுக்கு தாரைவார்ப்பதை ஏற்கமுடியாது என்கின்றனர்.

குலாம் முஹம்மத் மஹ்தி என்ற உள்ளூர் ஷியா மார்க்க அறிஞரிடம் கேட்டபோது: "மெக் டோனால்ட்" நிறுவனத்துக்கு எதிராக, தெளிவான "ஃபத்வா" உள்ள நிலையில், இதை அனுமதிக்க முடியாது,என்றார்.

    "மெக் டோனால்ட்" நிர்வாகத்திடம் கேட்டபோது, நாங்கள் "ரெஸ்டாரன்ட்" அமைக்கும் வேளையில் இதுவரை இரண்டரை கோடி ரூபாய்களை செலவழித்துள்ள நிலையில் எப்படி வேலைகளை நிறுத்துவது எனக்கேட்கின்றனர்.

    புதிய "வக்ப் சட்டப்படி" 3 ஆண்டுகளுக்குமேல் லீசுக்கு கொடுக்க கூடாது, என்ற எல்லா வரம்புகளையும் மீறி, பல கோடி வாடகை வருவாயை ஈட்டக்கூடிய இடத்தை, 50,000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    அட்வான்சாக ரூ. 2 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்ரஸ்டின் தலைவர் "எஸ்.ஏ. இஸ்பஹானி"யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், எடக்கு மடக்கான வாதங்களை முன்வைக்கிறார்.

     ஒருசிலர் தான் பிரச்சினை செய்கின்றனர், மற்றப்படி "மெக் டோனால்ட்" நிறுவனம் "கஃபதுல்லாஹ்" அருகிலேயே செயல்படும்போது, இங்கு தடை செய்யவேண்டும் என சொல்லுவது சரியா? என்பது போன்ற எதிர்க்கேள்விகளையே பதிலாக தந்தார்.

0 comments:

Post a Comment