1 Jan 2013
புதுடெல்லி:பாரதீய ஜனதா கட்சி ஆளும் கர்நாடகா மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாத போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகத்தின் சாய்கான் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியிடத்துக்குத் தூக்கிச் சென்ற சில காம வெறியர்கள் அவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கினார்கள். இந்தச் சம்பவம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெற்றது.
கடும் பாதிப்புக்குள்ளான சிறுமி ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்யாத போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்காக பாராளுமன்றத்தை கூட்டி விவாதிக்க கோரும் பா.ஜ.க, தனது கட்சி ஆளும் கர்நாடாகா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது அக்கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நன்றி, தூது
0 comments:
Post a Comment