Saturday, January 5, 2013

ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!

                      ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!


     அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !
  • இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
  • மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
  • இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
  • இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
  • அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
  • மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
  • மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
  • சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
  • தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
  • மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
  • உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
     இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்றோகிம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.

0 comments:

Post a Comment