Jan1, மும்பையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, பாலியல் பலாத்கார எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்ட 30 வயது பெண் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறார்.
சமூக ஆர்வலர்கள்-முக்கிய புள்ளிகள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்சி, கேமராக்களில் பதிவு செய்யப்படும் நிலையிலும், "ஆண்களும் பெண்களும் இரண்டறக்கலந்துக்கொள்வதால்" இது போன்ற குற்றங்கள் தவிர்க்க முடியாது, என்பது நிரூபணமாகியுள்ளது.
மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில், தான் மெழுகுவர்த்தியை கவனித்துக்கொண்டிருந்த வேளையில், தன்னுடன் இத்தகைய தகாத செயல்கள் நிகழ்ந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார், அப்பெண்மணி.
புகாரை பெற்றுக்கொண்ட "சாந்தா குரோஸ்" காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சுதீர் குதால்கர், எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல், விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேற்படி பெண்ணின் அருகிலிருந்த பலரை விசாரித்தும், ஒருவரையும் கைது செய்யாத காவல்துறை, வீடியோ பதிவுகளை பார்த்து சம்மந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்கிறது.
சென்னையிலும்-தமிழகத்தின் சில பகுதிகளிலும் இதுபோன்ற பேரணிக்கு சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment