Tuesday, January 1, 2013

பாரபட்சம் ஆகிப்போன நீதி! பத்திரிக்கையாளர் அருந்ததிராய்!


     இந்தியாவின் பொம்மை ஜனாதிபதி டெல்லி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார் .

     அதாவது, அவள் இந்தியாவின் மிக தைரியமான மகள், அவள்தான் இந்தியாவின் ஹீரோ, தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தைரியத்துடன் போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக முன்மாதிரியாக திகழ்ந்த வீரமகளை இந்த நாடு இழந்து துயரப்படுகின்றது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் இரங்கல் தெரிவித்தார்.

     இதற்க்கு முன்னாள் இந்தியாவில் கற்பழிப்புகளே நடக்காத மாதிரியும் இதுதான் முதல் முறை போன்றும் பொம்மை ஜனாதிபதி கட்டபொம்மன் சிவாஜி போல் வசனம் பேசுகிறார். இது, டெல்லியில் நடந்த மக்கள் எழுச்சியை மூடி மறைக்க பேசும் வீர வசனம். மற்றபடி கற்பழிப்புகளுக்கு எதிராககடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இதுவரை அதிகாரவர்க்கம் எண்ணியதில்லை.

**********************************
     அதே நேரம் பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

     அதாவது, கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விஷயங்கள் போன்றும் இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
      குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கற்பழித்து கொன்றனர். கர்ப்பிணி பெண்னை கற்பழித்து அவள் வயிற்ரை கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயுதத்தில் குத்தி நெருப்பில் இட்டு கொன்றனர். முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்து வெட்டியும், தீயிட்டும் கொளுத்தி கொன்றனர். இது விசயத்தில் ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?
     காஷ்மீரில் அப்பாவி பெண்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும் போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படாதது ஏன்? சத்திஸ்கரில் ஆதிவாசி பழங்குடி பெண் போலிசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய பெண் உறுப்பு கற்களால் சேதப்படுத்தப்பட்ட போது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை? கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்.
**********************************

0 comments:

Post a Comment