Friday, January 4, 2013

கிருஷ்ணகிரி : மாணவிகளுக்கு "தற்காப்பு" பயிற்சி!

   Jan4, பாலியல் தொல்லைகளை விட்டு தப்பிக்க, மாணவிகளுக்கு கராத்தே-குங்க்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மை பிரிவு துணைத்தலைவரும், கட்சி சார்பில் "வேட்பாளராக அறிவிக்கப்பட்டும்" போட்டியிட மறுத்துவிட்டவருமான "ஹசீனா சையத்" தெரிவித்தார்.

     அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

     மேலும், குற்றங்களை தடுத்துக்கொள்ளும் வகையில், பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, கராத்தே-குங்க்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

     சமீபத்தில் கிருஷ்ணகிரி அருகில் "ஆதிவாசி சிறுமி" ஒருவர், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதையடுத்து, கிருஷ்ணகிரியில் பல அமைப்புக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன், பாதிப்புக்குள்ளான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

0 comments:

Post a Comment