Friday, January 4, 2013

சட்டவிரோத மருந்து பரிசோதனை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

4 Jan 2013 Illegal Drug Testing-The Supreme Court condemned!
 
     டெல்லி:மனிதர்களிடம் நடத்தப்படும் சட்டவிரோத மருந்து பரிசோதனைகளை தடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
     புதிதாக தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளை நாடு முழுவதும் பல மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்போது, அனுமதி பெறாத புதிய மருந்துகளை மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் செயல் கட்டுப்பாடின்றி நடைபெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
     மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை, நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் கண்காணிப்பின்கீழ்தான் மருந்து பரிசோதனைகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டனர். நமது நாட்டில் வாழும் மனிதர்களின் நலனைக் காக்க வேண்டியது நமது கடமை. இதுபோன்ற சம்பவங்களில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக ஆய்வு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்துக்கு விரோதமான முறையில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக முக்கிய விஷயமாக எடுத்து கையாள வேண்டும். என்றும் நீதிபடிகள் உத்தரவிட்டனர். அப்போது இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். நன்றி, தூது

0 comments:

Post a Comment