ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மீது, இளைஞர் ஒருவர் பாதணி வீசிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அது அவர் மீது படவில்லை.
அவன் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள சாரி நகரைச் சேர்ந்தவன் என்றும், டெக்ஸ்டைல் மில்லில் வேலைபார்த்த அவன், சமீபத்தில் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டில், வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையில்லாதவர்களுக்கு அரசின் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்று அவன் குற்றம் சாட்டியுள்ளான்.
நாட்டில், வேலையின்மை விகிதம் 11 சதவீதமாக பதிவாகி உள்ளது என சமீபத்தில் அரசு கூறியிருந்த நிலையில், ஜனாதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
yarlmuslim
0 comments:
Post a Comment