Friday, December 16, 2011

கடாபியின் மரணத்தில் அமெரிக்கா தொடர்பு - ரஷ்யா பிரதமர் தெரிவிப்பு


லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொலையில் அமெரிக்காவின் விசேட படைக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் உரையாற்றிய புடின் கூறியதாவது, இதனை யார் செய்தார்கள். அமெரிக்க விசேடப் படை விமானங்கள் கடாபி மீது தாக்குதல் நடத்தின. பின்னர் தொலைபேசி மூலம் எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விசேடப் படை வீரர்கள் அங்கு வரவழைத்தனர். பின்னர் எந்த நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் கடாபி கொல்லப்பட்டார் என புடின் குறிப்பிட்டார். முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து ரஷ்ய தரப்பில் வெளியான முதலாவது அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் புடினின் கருத்துக்கு அமெரிக்கா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது. புடினின் கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டா குறிப்பிட்டுள்ளார்.

கடாபி கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உலகுக்கே தெரிந்தது. அமெரிக்க படைகளின் காலடி கூட இந்த யுத்தத்தில் லிபிய மண்ணில் பதியவில்லை என அவர் தெரிவித்தார்.
yarlmuslim

0 comments:

Post a Comment