Jan4, ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றி "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என முஸ்லிம்களை மிரட்டும் வகையில், பகிரங்கமாக பேட்டியளித்த விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா"வுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
சார்மினாரில் கோவில் கட்டுவதை எதிர்த்தால்? "ஹைதராபாத்தை அயோத்தி"யாக மாற்றி முஸ்லிம்களுக்கு "மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்" என, கடந்த டிசம்பர் மாதம் பேட்டியளித்த பிரவீன் தொகாடியா மீது, 295A பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் "குலாம் ரப்பானி" இன்று (04/01) பிற்பகலில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட ஹைதராபாத் 7வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட், ஜனவரி 8 ந்தேதியன்று முழுமையான வழக்கு வடிவத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஆந்திர மாநில "சைதன்யபுரி" காவல் நிலையத்திலும் தொகாடியா மீது 295A பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதன்யபுரியில் நடந்த வி.ஹெச்.பி. செயல்வீரர் கூட்டத்தில் "மத துவேஷமாக பேசியதாக" உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரை ஏற்று, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் ஆந்திர மாநில காவல்துறை தொகாடியா மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்திருப்பதும், நடவடிக்கைகள் பூஜ்ய நிலையிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment