Saturday, December 10, 2011

சாக்கடல் (Dead Sea) சாக போகிறது



அம்மான் : ஜோர்டான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஓடும் சரித்திர புகழ் பெற்ற சாக்கடல் (Dead sea) சுமார் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி காணாமல் போய் விட்டது. மீண்டும் அப்பெரிய கடல் நீர் வற்றி போய் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சாக்கடல் அல்லது இறந்த கடல் என்று அழைக்கப்படும் அக்கடலின் மணற்துகள்களை ஆராய்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் அபாயகரமான அளவில் சாக்கடலின் தண்ணீர் அளவு குறைந்து கொண்டிருப்பதாக கவலை தெரிவித்தனர். 
மத்திய கிழக்கில் இன்னொரு பெரும் வறட்சி ஏற்படுமானால், இக்கடல் அதை தாக்கு பிடிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறிய விஞ்ஞானிகள் இக்கடலின் தண்ணீர் மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தும் அதிகமான அளவால் இந்நிலை ஏற்படும் என்றனர்.

உலகில் மிக கீழ் மட்டத்தில் உள்ள இக்கடல் வெறும் 425 மீட்டர்களே கடல் அளவை விட உயரமான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக உப்பு தன்மையுள்ள இக்கடல் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி போன போதும் திரும்ப வந்தது போல் இம்முறை வற்றினால் சுத்தமான நீர் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டதால் இது இறந்து விடும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
yarlmsulim

4 comments:

  1. Dear Brother

    இந்நேரத்தில் வெளியாகும் ஆக்கங்களை அப்படியே நன்றி போடாமல் அப்படியே வெளியிடுவது பத்திரிகை தர்மமல்ல. தொடர வேண்டாம் இந்நிலை. ப்ளீஸ்.
    அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளூங்கள்

    ReplyDelete
  2. sagothara naan unga website la irunthu edukave ila itha..........naan yarlmuslim websitenu alaga keela pottukirrene....naan antha website la irunthuthaan edutten.mannikavum.

    ReplyDelete
  3. செய்திகள் அனைத்தும் மக்களுக்கே!
    காப்பி செய்து பயன்படுத்தலாம்.
    அனுமதி பெற தேவையில்லை. go to www.sinthikkavum.net and if like any news you can take it. u dont wanna put thank.

    ReplyDelete