Saturday, December 10, 2011

பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியின் மர்மம் நீடிக்கிறது



பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி சமீபத்தில் திடீர் என்று துபாய் சென்றார். அவரது பயணம் மர்மமாக இருந்தது. உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற சென்றதாக சில நாள் கழித்து தகவல் வெளியானது. அவருக்கு மாரடைப்பு என்றும், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் பக்கவாதம் என்றும் கூறப் பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் சில நாட்கள் துபாயில் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பிறகு லண்டன் சென்று தங்குவார் என்றும் அவர் பாகிஸ்தான் திரும்ப தயங்குவதாகவும் இன்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் ராணு வத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது. ராணுவ அதிகாரிகளுக்கும் சர்தாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சர்தாரியை கேட்காமலேயே ராணுவம் சில நடவடிக்கையில் ஈடுபட்டது. இது தனக்கு செய்யும் துரோகமாக சர்தாரி குற்றம் சாட்டினார். இது போன்ற துரோக செயலில் ராணுவம் ஈடுபடாது என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே நாடு திரும்புவேன் என்று சர்தாரி நிபந்தனை விதித்துள்ளார். மேலும் சர்தாரி அமைதிப் புரட்சி மூலம் ஆட்சி நிர்வாகத்தை மகன் பிலாவால் பூட்டோவிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை பொறுப்புகளை பிலாவால் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தாரியின் உதவியாளர் கூறும் போது, அவர் துபாயில் சிகிச்சை பெற்ற பின் லண்டன் சென்று மேல் சிகிச்சை பெறுவார். எனவே அவர் இப்போ தைக்கு பாகிஸ்தான் திரும்பமாட்டார் என்றார். துபாயில் அவருக்கு இன்னும் பரிசோ தனைகள் நடைபெற இருப்ப தால் 2 வாரத்துக்கு மேல் தங்கி இருப்பார் என்றும் கூறினார்.

இதற்கிடையே 3 நாட்களில் பாகிஸ்தானில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று மேலும் ஒரு அதிகாரி கூறினார். ஒரு வழக்கில் சர்தாரிக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது. ராணுவ தளபதி மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைவர், முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசைன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சர்தாரி தவித்தார். இதனை தவிர்க்கவே துபாய் சென்றார் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
yarlmuslim

0 comments:

Post a Comment