பெய்ரூத்:இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் நியூக்ளியர் செண்ட்ரிஃப்யூஜ்(அணு மைய நீக்கி) களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஸ்டெக்ஸ்நைட் என்ற கம்ப்யூட்டர் வைரஸை அமெரிக்கா தயாரித்துள்ளது.ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில்தான் ஈரானின் கம்ப்யூட்டர் அமைப்பில் வைரஸை நுழைய வைக்க முயற்சி துவக்கப்பட்டது.முஸ்லிம் உலகுடன் நட்புறவை புனரமைக்கப் போவதாக சவடால் விடுத்த பாரக் ஒபாமா, அமெரிக்க
அதிபராக பதவியேற்றவுடன் இத்திட்டம் மேலும் தீவிரமடைந்தது.அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் ஸ்டெக்ஸ்நெட் வைரஸின் பின்னணியில் செயல்படுவதாக அன்றைக்கே ஈரான் குற்றம் சாட்டியிருந்தது. அக்குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் ரிப்போர்ட்டரான டேவிட் ஸாங்கர் எழுதிய புத்தகத்தில் இருந்து அண்மையில் வெளியான பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு துவங்கிய இத்திட்டம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் ஸ்ட்ராட்டஜிக் கமாண்டின் கீழ் ஒலிம்பிக் கேம்ஸ் என்ற சங்கேத பெயரிலான (கோட் நேம்) இத்திட்டத்தின் நோக்கம், ஈரானில் நதான்ஸில் உள்ள அணுசக்தி மையத்தில் வைரஸை நுழைவித்து செண்ட்ரிஃப்யூஜுகளின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகும். இந்த வைரஸை நுழைவிக்க ஒத்துழைத்தது, சைபர் போர் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் ஒரு இஸ்ரேலிய நிறுவனமாகும்.
லிபியாவின் கர்னல் கத்தாஃபி மேற்கத்தியர்களை நம்பி தனது அணுசக்தி திட்டத்தை கைவிட்ட பொழுது அமெரிக்காவுக்கு அளித்த செண்ட்ரிஃப்யூஜிகளில் இந்த வைரஸ் முதன்முதலில் சோதனை நடத்தப்பட்டது.
2008-ஆம் ஆண்டு ஸ்டெக்ஸ்நெட் வைரஸ் நதான்ஸ் அணுசக்தி நிலையத்தில் பிரயோகிக்கப்பட்டது. ஆனால், ஐ.டி துறையில் முன்னணியில் உள்ள ஈரான், உடனடியாக அதனை கண்டுபிடித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.
அதிபர் பதவியில் இருந்து விலகிய வேளையில் ஜார்ஜ் புஷ், ஒபாமாவிடம் ஸ்டெக்ஸ்நெட் வைரஸ் உள்ளிட்ட 2 திட்டங்களை கைவிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னொரு திட்டம் ஆளில்லா விமானங்களை(ட்ரோன்) உபயோகித்து அப்பாவி மக்களை பாகிஸ்தானில் கொன்றொழிப்பதாகும்.
2010-ஆம் ஆண்டு ஒபாமாவின் சிறப்பு உத்தரவின் பேரில் இந்த வைரஸ் மேலும் நவீனப்படுத்தப்பட்டு மீண்டும் உபயோகிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான செண்ட்ரிஃப்யூஜ்களின் செயல்பாடுகள் சீர்குலைந்தன. ஆனால், ஈரான் விஞ்ஞானிகள் இதனையும் உடனடியாக கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். பின்னர் இஸ்ரேல் கோடிங்கில்(சந்தேக வார்த்தை) ஏற்பட்ட தவறு, இதர நாடுகளின் கம்ப்யூட்டர் அமைப்புகளையும் தாறுமாறாக்கியதாக கருதப்படுகிறது.
ஸ்டெக்ஸ்நெட்டின் தோல்வியை மூடிமறைக்க, அமெரிக்காவும், இஸ்ரேலும் தற்பொழுது புதிதாக ஃப்ளெய்ம் என்ற பெயரில் ஒரு புதிய வைரஸை கண்டுபிடித்துள்ளனர். ஈரானின் அணு விஞ்ஞானிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்து ரகசியங்களை திருட உதவுவதுதான் இந்த ஃப்ளெய்ம் வைரஸ்.
பல ஈரான் நாட்டு விஞ்ஞானிகளையும் கொலைச்செய்ய இந்த ஃப்ளெய்ம் வைரஸ் பயன்பட்டதாக கருதப்படுகிறது. கேமராக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் உபயோகிக்கும் ஃப்ளெய்ம் குறித்த விபரங்களை ஈரானியர்கள் வெளியிட்டுள்ளனர். சர்வதேச சட்டத்தின்படி கம்யூட்டர் சிஸ்டத்தில் வைரஸை நுழையச் செய்வது குற்றமாகும்.
thanks to asiananban
0 comments:
Post a Comment