இஸ்தான்புல்:துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தேசிக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியை தாக்குவதற்கு அரசோ, பொதுமக்களோ விரும்பவில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் எவ்வித பகைமையும் துருக்கி சமூகத்திற்கு இல்லை.சிரியா வான் எல்லையில்
அத்துமீறி பறந்ததாக கூறி துருக்கி விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து எர்துகான், சிரியாவை தாக்க தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். துருக்கி விமானம் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் பறக்கவில்லை என்றும், தவறுதலாக சிரியா வான் எல்லைக்குள் நுழைந்த போதும், விமானக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக திரும்பி விட்டதாகவும்,சர்வதேச வான் எல்லையில் வைத்துதான் சிரியா ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்பட்டது.
அதேவேளையில் ரஷ்யா அதிபர் விளாடிமீர் புடீன் துருக்கி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எர்துகானிடம் நடத்திய தொலைபேசி உரையாடலில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment