Tuesday, June 26, 2012

வரம்பு மீறினால் புரட்சி தொடரும்' - எகிப்தின் ஜனாதிபதிக்கு அவருடைய மகன் எச்சரிக்கை..!



எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி 
தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.


முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நீங்கள் வரம்பு மீறினால் புரட்சி தொடரும். புரட்சிக்கு மாற்றமான முடிவுகளை நீங்கள் எடுத்தால் புரட்சி தொடரத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார வேளையில் முஹம்மது முர்ஸி இவ்வாறு எகிப்திய மக்களிடம் கூறினார்: “எனக்கு தவறு நேர்ந்தால் என்னை திருத்துங்கள்” என்று.

.........................................................

தேசிய ஒன்றுமைக்கான அழைப்பினை எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் மூர்சி விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக மூர்சி பதிவாகியுள்ளதுடன், அனைத்து எகிப்தியர்களுக்கும் தாம் ஜனாதிபதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்தவாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி சார்பாக போட்டியிட்ட மூர்சி 51.73 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஹொஸ்னி முபாரக்கின் பதவிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த அஹமட் ஷபீக் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

எகிப்தின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மூர்சிக்கு பல்வேறு உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே எகிப்தின் ஆளும் இராணுவப் பேரவை தன்னிச்சையாக அதிகாரங்களை சுவீகரித்துள்ளமை மற்றும் தேர்தல் முடிவுகள் எகிப்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

0 comments:

Post a Comment