அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருக்கும் இடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 10 ஒட்டகங்கள் பரிசாக வழங்கப்படும் என அல் காய்தாவின் தொடர்புள்ள இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது.
சோமாலியாவிலுள்ள ஷபாப் என்ற அமைப்புதான் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தைச் சார்ந்த புஆத் முஹம்மத் கலப் என்பவரைப்பற்றித் தகவல் தருபவருக்கு 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், இந்த இயக்கத்தின் தலைவர் அப்தி அவ் முஹம்மத் பற்றித் தகவல் தருபவருக்கு 7 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது.இதனைக் கேலி செய்யும்
விதமாக ஷபாப், ” முட்டாள் ஒபாமா பற்றித் தகவல் தருபவர்களுக்கு 10 ஒட்டகங்களும், கிழவி ஹிலாரி கிளிண்டன் பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு 20 கோழிகளும்” பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பினை கலப் வெளியிட்டுள்ளார்.ஷபாப் இயக்கத்தினை தீவிரவாத இயக்கமாக 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. இந்த வருடம் பிப்ரவரியில், அல்காய்தாவுடன் இந்த இயக்கம் இணைந்துள்ளதாக அல்காய்தா தெரிவித்திருந்தது. சோமாலியாவின் பல பகுதிகளைக் கைவசம் வைத்துள்ள இந்த இயக்கம், கென்யாவின் அரசுப் படைகள், எதியோப்பிய அரசுப் படைகள் மற்றும் ஆப்ரிக்க யூனியன் படைகளை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
thanks to asiananban
0 comments:
Post a Comment