Thursday, June 14, 2012

ஈராக் தொடர் குண்டு வெடிப்புகள் - 60 பேர் பலி


 ஈராக்கில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் ஏறத்தாழ 60 பேர் பலியாகி உள்ளனர். பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தளத்தில், கார்களில் வைத்திருந்த குண்டு வெடித்தது. ஹில்லா மற்றும் கிர்குக் உள்ளிட்ட 10 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது.இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி ஏறத்தாழ 60 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஷியாக்கள்  இமாம் மூஸா அல் காதிம் என்ற மதகுருவின் நினைவு தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது. பாக்தாத்தின் வடக்கில் உள்ள பலத் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஹில்லா நகரில் தற்கொலை குண்டுதாரி உணவகத்தின் அருகில் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த உணவகத்திற்கு காவல்துறையினரின் வாகனம் வந்தபோது இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

05.01.2012 அன்று ஈராக்கில் குண்டு வெடிப்புகளில் 68 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அதிகளவு மக்கள் இன்று கொல்லப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
thanks to asiananban

0 comments:

Post a Comment