மாட்ரிட்:சுயமாக தன்னை அழித்துக்கொள்ள தயாரானால் மட்டுமே இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று ஸ்பெயினில் ஈரானின் தூதர் முர்தஸா ஸஃபரி தெரிவித்துள்ளார்.ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான வாய்சவடாலை முற்றிலும் நிராகரித்த முர்தஸா இவ்வாறு தெரிவித்தார்.ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான டி.வி3 க்கு பேட்டி அளித்தார் முர்தஸா. இஸ்ரேலோ,
அமெரிக்காவோ தற்பொழுது ஈரானை தாக்கும் சூழல் இல்லை. ஆப்கானிலும், ஈராக்கிலும் எவ்வாறு வெளியேறுவது என அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. அதனிடையே அவர்கள் இன்னொரு போருக்கு தயாராவார்கள் என்று கருதவில்லை. ஆனால், ஈரானை தாக்க இஸ்ரேல் முயன்றால், அதற்கு வலுவான பதிலடிக் கொடுக்க ஈரானால் இயலும். சியோனிஸ்டுகளின் தோல்வி உறுதியாகும் என்று முர்தஸா கூறினார்.thanks to asiananban
0 comments:
Post a Comment