Monday, June 4, 2012

லஞ்சம்:கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு 3 1/2 ஆண்டு சிறை !



BJP MLA Sampangi Gets Three-and-half Years' Jail in Bribery
பெங்களூர்:லஞ்சம், ஊழல், மோசடி, பாசிசம், உட்கட்சிப் பூசல் என ஒழுக்கக்கேடுகளையும், அராஜகங்களையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.கவின் அசிங்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கும் வேளையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கர்நாடகா மாநில லோக்
ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒய்.சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹுசேன் மொஹீன் பாரூக். இவர், தனக்கு ஏற்பட்டிருந்த சொத்துப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, அந்தத் தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த ஒய்.சம்பங்கியை அணுகினார். அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எம்எல்ஏ ஒய்.சம்பங்கி கேட்டாராம். இதுதொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை லோக் ஆயுக்த போலீஸாரிடம் பாரூக் அளித்தார்.
சட்டப்பேரவை விடுதியில் 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் சம்பங்கியிடம் தொகையை பாரூக் வழங்கியபோது போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.கே.சுதீந்திர ராவ், வழக்கின் தீர்ப்பை நேற்று(சனிக்கிழமை) கூறினார்.
தீர்ப்பில் கூறியிருப்பது: பாஜக எம்எல்ஏ ஒய். சம்பங்கி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றுபவர் லஞ்சம் பெற்றுக் கொள்ள நினைத்ததே தவறு. இதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர், சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கியதற்காக மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்  என்று நீதிபதி குறிப்பிட்டார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment