தஞ்சாவூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பள்ளி விடுமுறை கழிந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் காலகட்டங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் தங்களது கல்வியை தொடரவும், புதியதாக பள்ளியில் சேர்க்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் "ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இப்பிரச்சாரத்தின் போது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேரணிகள், ஆலோசனை கூட்டங்கள், கருத்துக்கணிப்புகள் என பல்வேறு பணிகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை கண்டறிந்து கல்வியை தொடர்வதற்காக அதற்கான உபகரணங்களை பாப்புலர் ஃபரண்ட் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆவூரில் கடந்த வியாழக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "ஸ்கூல் சலோ" பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுமார் 150 மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி பயில்வதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

0 comments:
Post a Comment