Friday, June 22, 2012

ஆஃப்கானில் குர்ஆன் பிரதியை எரித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தண்டனை ?


US probe calls for punishment of troops in Afghanista​n Qur’an burning

காபூல்:ஆஃப்கானில் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த சில வீரர்கள் புனித குர்ஆன் பிரதியை எரித்து அவமதித்தது நாம் அறிந்ததே. குர்ஆன் எரிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்க ராணுவம் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. எனினும் குர்ஆனை அவமதித்தற்காக அவர்கள் மீது
கிரிமினல் நடவடிக்கை தேவை இல்லை என்றும் அது கூறியுள்ளது.
மேலும் குர்ஆனை எரித்த 11  வீரர்களுக்கான தண்டனை என்ன என்பதை முடிவு செய்து ஒரு வாரத்திற்கு முன்பே தங்களால் அவர்கள் பெண்டகனுக்கு அனுபப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை தொடர்பான விசாரணை முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளரான ஜார்ஜ் ரைட் தெரிவித்தார்.
ஆஃப்கானில் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும் விமான தளமான பக்ராம் விமான தளத்தில் சில இனவெறி பிடித்த 11 அமெரிக்க ராணுவ வீரர்கள் புனிதக் குர்ஆனை எரித்தது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் 7  பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள அனைவரும் இதில் தொடர்பு இல்லாதவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஃப்கானில் குர்ஆன் எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் 2  அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 40  பேர் உயிர் இழந்தனர். மேலும் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவும் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராணவத்தினரால் குர்ஆன் அவமதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் ஆஃப்கானிலும் இன்னும் உலகின் பிற பகுதிகளிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

thanks to asiananban

0 comments:

Post a Comment