Wednesday, June 6, 2012

காலர் டியூன் கொடுத்து கட்டணம் வசூலிக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, டிராய் எச்சரிக்கை !



வாடிக்கையாளரிடம் கேட்காமலேயே காலர் ட்யூன் போன்ற மதிப்பு கூட்டு சேவைகளை (விஏஎஸ்) அளித்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கத்துக்கு டிராய் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ரிங் டோன், காலர் ட்யூன் உட்பட எந்த மதிப்பு கூட்டு சேவையை யும் வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் அமல்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது
என்று கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி செல்போன் நிறுவனங்களுக்கு விதிமுறை வகுக்கப்பட்டது. வாடிக்கையாளரிடம் எஸ்எம்எஸ், இமெயில், பேக்ஸ் அல்லது எழுத்துமூலம் அனுமதி பெற்ற பிறகே கட்டண சேவையை அளிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே, பெறப்பட்ட சேவையின் சந்தா காலம் முடியும் நிலையில், அதை வாடிக்கையாளரின் அனுமதியின்றி செல்போன்  நிறுவனங்கள் தாமாக நீட்டிக்க கூடாது. குறைந்தது 3 நாள் முன்பாக வாடிக்கையாளரிடம் கேட்டு, அவர் விரும்பினால் மட்டுமே சேவை யை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், ஓராண்டு நெருங்கும் நிலையில் இப்போதும் இதுபற்றி செல்போன் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மதிப்பு கூட்டு சேவை களை வாடிக்கையாளர் விருப்பமின்றி லாப நோக்கில் நிறுவனங்கள் திணிப்பதை ஏற்க முடியாது. இனி வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிராய் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
thanks to asiananban

0 comments:

Post a Comment