Monday, June 18, 2012

பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான்!


 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய கட்சி பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட ஓட்டபோட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசிய முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே எந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுபோடுகிறார்கள் என்பது தெரியாது. இதைவைத்து அப்துல் கலாமுக்கு ஆதரவாக கட்சிமாறி ஓட்டபோட நிறைய வாய்ப்புகள்உள்ளன.

அப்துல் கலாமுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதால் அவரை பலரும் ஆதரிக்க தயாராக உள்ளனர். எனவே கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் பிரணாப் முகர்ஜிக்கு பாதிப்பு ஏற்படலாம்.

பாராளுமன்றம்- சட்டமன்றத்தில் நடக்கும் மற்ற விஷயங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடும் போது கட்சி கொறடாவின் உத்தரவை ஏற்று ஓட்டுபோட வேண்டும். அதை மீறினால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்த முறை பொருந்தாது. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுபோடலாம்.

1969-ம் ஆண்டு ஜாகீர் உசேன் மரணத்தை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவி ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆனால் பிரதமர் இந்திராகாந்தி வி.வி.கிரியை தனியாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.

காங்கிரசுக்கு இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைபடி சஞ்சீவிரெட்டிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் கட்சிமாறி வி.வி.கிரிக்கு ஓட்டுபோட்டதால் அவர் வெற்றிபெற்று விட்டார். அதிகார பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவிரெட்டி தோல்வி அடைந்தார்.

அப்துல்கலாம் நிறுத்தப்பட்டால் மட்டுமே மாற்று கட்சியினர் அவருக்கு ஆதராவக ஓட்டுபோட வாய்ப்புள்ளது. வேறு யாரையாவது நிறுத்தினால் மாற்று கட்சி ஓட்டுகள் விழுவதற்கு வாய்ப்பு இல்லை.

thanks to asiananban

0 comments:

Post a Comment