Monday, June 25, 2012

முஸ்லிம் சிறைவாசிகளுக்கான போராட்டம் - சென்னை


முஸ்லிம் சிறைவாசிகளுக்கான போராட்டம் - சென்னை

25 ஜூன், 2012


சென்னை: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து துவங்க இருந்த இப்பேரணி காவல்துறையினரின் கிறுபிடியால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. இப்பேரணிக்காக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இராஜரத்தினம் மைதானத்திலிருந்து காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வரை பேரணி நடத்த அனுமதி கோரினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் காவல்துறை அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் இவ்வழியாக பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தடுத்தனர்.




உயர் அதிகாரிகள் ஏற்கனவே வாய்மொழியாக அனுமதி வழங்கிவிட்டார் என எடுத்துக்கூறியும் அப்பகுதி உதவி ஆணையர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தாங்கள் கைது செய்யப்பட்டாலும் பராவாயில்லை திட்டமிட்டபடியே பேரணியை நடத்துவோம் என்று உறுதியாக இருந்த பின்னர் காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.







0 comments:

Post a Comment