Wednesday, June 13, 2012

மியான்மர்:அபயம் தேடி வந்தவர்களை திருப்பி அனுப்பிய பங்களாதேஷ் அரசின் மனிதநேயமற்ற செயல் !


யங்கூன்:ஏராளமான மக்களின் மரணத்திற்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் புலன்பெயர்வுக்கும் காரணமான வடக்கு மியான்மர் வகுப்பு கலவரம் ஓய்ந்தபாடில்லை. இக்கலவரத்தில் 25 பேர் படுகொலைச் செய்யப்பட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக எ.எஃப்.பி செய்தி கூறுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் மேற்கு மாவட்டமான ராக்கினில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், பெளத்த மதத்தினரிடையே கலவரம் துவங்கியது. கலவரத்தை கட்டுப்படுத்த மியான்மர் அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது
.
கலவரம்,மியான்மரில் நடைமுறைப்படுத்தும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு அபாயத்தை உருவாக்கும் என அதிபர் தைன் ஸென் எச்சரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய புத்த மதத்தினருக்கு பள்ளிக்கூடங்கள், புத்த விஹார்கள் மற்றும் போலீஸ் தலைமை நிலையங்களில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கலவரத்தை தொடர்ந்து புத்தர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பங்களாதேசுக்கு அபயம் தேடிச் சென்ற ரோஹிங்கியா முஸ்லிம்களை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படை மனிதநேயமற்ற முறையில் திருப்பி அனுப்பியுள்ளது.திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
புலன் பெயர்ந்தோருக்கான ஐ.நாவின் உயர் ஆணையர், பங்களாதேஷ் அதிகாரிகளிடம் புலன் பெயர்ந்தோருக்கு புகலிடம் அளித்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும், மருத்துவ உதவியையும் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
12 மர படகுகளில் வந்த பெண்களும், குழந்தைகளும் அடங்கிய 300 பேரை பங்களாதேஷ் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
சித்வே நகரம் போர்க்களமாக காட்சி அளிப்பதாக ஆளுங்கட்சியான யூனியன் ஸாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சியின் கீழ் அவை உறுப்பினர் ஸ்வெ மாங் கூறுகிறார். சித்வே அருகில் உள்ள கிராமம் ஒன்றில் போலீஸார் ஊரடங்கு உத்தரவை மீற பெளத்தர்களுக்கு அனுமதி அளித்தனர். இதன் காரணமாக பெளத்தர்கள் முஸ்லிம் வீடுகளை தீக்கிரையாக்கினர் என்று மாங் குற்றம் சாட்டுகிறார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு குடியுரிமையை வழங்காமல் அவர்கள் ஊடுருவியவர்கள் என குற்றம் சாட்டி கடுமையான பாரபட்சம் காட்டி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.

Bangladesh sends back boatloads of Rohingya Muslims fleeing Myanmar violence
thanks to asiananban

0 comments:

Post a Comment