Monday, June 18, 2012

அப்துல் கலாமுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாம் !


RSS chief favours Kalam
ஹரித்துவார்:இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அப்துல் கலாமை ஆதரிக்கிறதாம். ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் சர்சங்க் சாலக்(தலைவர்) மோகன் பாகவத் இதனை தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியது: ‘குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. அவர் இனிமையான மனிதர் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துவரும் மற்றவர்கள்
அனைவருக்கும் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால், அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.
நான் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்’ என்றார் மோகன் பகவத்.
பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணிக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து முடிவு அறிவிப்பதை பாஜக கூட்டணி தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து அப்துல் கலாமுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கலாமுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலாம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சங்க்பரிவார்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அப்துல் கலாமை ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம் ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.
thanks to asiananban

0 comments:

Post a Comment