Wednesday, June 27, 2012

இராமநாதபுர​ம் காவல்துறையி​ன் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்​ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்​கள் விடுதலை !


Ramanathapuram Press Conference - 2பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது


“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மணிப்பூர், இராஜஸ்தான், டெல்லி என இந்திய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய பேரியக்கம். அதன் அடிப்படையில் இங்குள்ள உறுபினர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுய முன்னேற்ற வகுப்புகளில் கலந்து கொள்வதும், அவர்கள் நம் தமிழ்நாட்டிற்கு வருவதும் எதார்த்தமான ஒன்று.
அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுய முன்னேற்ற மற்றும் நல்லொழுக்க வகுப்புகள் கடந்த 6 நாட்களாக நடந்து வருகின்றது. இயற்கையான சூழ்நிலை, அமைதியான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் நம் தமிழகத்திற்கு சுய முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க வகுப்பிலே கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்களை சேர்ந்த எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 22 பேர் வந்து பங்கெடுத்தனர்.
இதில் தனி மனிதனை பன்படுத்துதல், சுய முன்னேற்றம், நேரம் பேணுதல், செய்தி தொடர்பு பரிமாற்றம், யோகாசனம், மெல்லோட்டம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மேலாண்மை ஆகிய வகுப்புகள் கொடுத்து பண்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் நேற்று (25.06.2012) மதியம் 2 மணி அளவில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ் குமார் உத்தரவின் பேரில் ஒரு உதவி எஸ்.பி,  4 டி.எஸ்.பிகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 26 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையின் 17 காவல் வாகனங்களில் வந்து இறங்கி, அத்துமீறி உள்ளே நுழைந்து வெளிமாநில உறுப்பினர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 8 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெரியபட்டிணம் என்பது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஒரு கிராமம். இங்குள்ள மக்களை பீதிவயப்படுத்தும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறையின் சிறுபான்மை விரோதப் போக்கையும், பாரபட்சத்தையும் தெளிவாக காட்டுகின்றது. இத்துணை பெரிய காவல் படையுடன் அங்கே வந்து பீதியை கிளப்பியது திட்டமிட்டே காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.
காவல்துறையின் இந்த மோசமான செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.
கைது செய்ததற்கு பிறகு எந்த வித முகாந்திரமும இல்லாததால் நேற்று இரவே கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.
இவ்வாறு தவறான உள்நோக்கம் கொண்டு சிறுபான்மை சமூகத்திற்கு தேசிய அளவில் என்ன வகையான அநீதி இழைக்கப்படுகின்றதோ அதே போன்ற சூழ்நிலையை தமிழகத்திலும் காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் காவல்துறையின் இந்த செயல் நிச்சயமாக தமிழக காவல்துறைக்கு ஒரு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அத்துமீறி சுய முன்னேற்ற வகுப்பிற்குள் நுழைந்து பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை கைது செய்து, பீதியை கிளப்பி, பாப்புலர் ஃப்ரண்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.” என்றார்.

0 comments:

Post a Comment