இந்து என்ற சொல் நமது பண்டைய இலக்கியங்களில் எதிலும் இல்லாத சொல் .முதன்முதலில் எட்டாம் நூற்றாண்டில்தான் ஒரு தாந்த்ரீக நூலில் குறிக்கப்பட்டுள்ளது . அதுவும் மக்கள் கூட்டத்தை குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது மாறாக மதத்தை குறிக்கும் சொல்லாக இல்லை என்கிறார் நேரு .(The discovery of India p.62).
அம்பேத்கர் கூறுகிறார் " இந்து என்ற சொல் அரேபியர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை குறித்து சொன்னது .மேலும் அது எந்த வேதங்களிலோ சம்ஸ்கிருத மொழியிலோ காணப்படவில்லை .
இந்து என்ற ஒரு மதம் இல்லை அது ஆரிய மதம்தான் சரியான சொல் என்கிறார் காந்தி (M.K.Gandhi-Hindu Dharma-the Glory and Abuses-Orient paperbacks -p.27)
லூனியா என்னும் அறிஞர் " பாரசீகர்களும் ,கிரேக்கர்களும் இந்த நாட்டை சிந்து என்றுதான் அழைத்தனர் . பாரசீகர்களின் உச்சரிப்பில் சி இல்லாததால் சிந்துவை இந்து எனக்குறித்தனர் என்கிறார் .( B.N.Luniya-Life and Culture in Ancient India )
Dr .ராதகிருஷன வட மேற்கிலிருந்து படை எடுத்து வந்தவர்கள் அப்பகுத்திக்கு கொடுத்த பெயரே இந்து என்ற கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் ."இந்து என்ற மதம் ,இடம் காரணமாக ஏற்பட்ட பெயரே அன்றி மதம் சம்பத்தப்பட்ட பெயரல்ல .ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களையே அது குறிக்கும் .(Dr.S. Radhakirushnan-The Hindu view of life -p.12).
இந்து என்றே மதமே இல்லை அது இல்லவேயில்லை .அது ஆரிய மதம்தான் .
சமீப நூற்றாண்டுகளில் வருகை தந்த அரேபியர்களும் .அதன் பின்னர் வெள்ளையர்களும் தங்களது குறிப்புகளில் பலதரப்பட்ட மதங்களையும் அவர்கள் இந்து என்றே பயன்படுத்தினர் .
விவேகானந்த மகேந்திர பத்திரிகையில் நாராயணர் என்பவர் எழுதும்போது " இந்து மதம் என்று அழைப்பது இல்லாத ஒன்றை அழைப்பது போன்ற காரியம் ".'இந்து', 'இந்து மதம் ' ஆகிய சொற்கள் மிகப்பிற்காலத்தில் அந்தியர்கள் நம்மோடு தொடர்பு கொண்டதால் ஏற்ப்பட்ட சொற்கள் என்று எழுதுகிறார் .(Narayanan -Christianity , A critical study -vivekananda prakshan kendra -Madras).
இந்தியாவில் உள்ள பல மதங்களின் நம்பிக்கைகளை பற்றி ஸ்ரீ சங்கராச்சாரியா உபந்தியாசம் செய்யும்போது " வெள்ளையன் நமக்கு இந்துக்கள் என்று பெயர்கொடுத்தான் . அவன் கொடுத்த பெயர் நம்மை காப்பாற்றியது என்கிறார் .(acharya swamikal upanyasangal -part 1-kalaimagal karyalayam 1957)
இதுவரையிலும் இந்து என்ற சொல்லைப்பற்றி பார்த்தோம் அது இடத்தின் பெயரே அன்றி அது ஒரு மதத்தின் பெயரல்ல என்பதை அறிந்திருப்பீர்கள் .
இந்தியாவில் வசித்த வந்த பழங்குடியினர்
இந்திய பிரசித்தி பெற்ற அரசியல் அறிஞரும் வரலாற்று வல்லுனருமான கே .எம் ,முஷி அவர்கள் " இந்தியாவில் ஆதியில் குடியேறினவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து வந்த நிக்ரிட்டோக்கல்தான் .ப்ரோட்டோ ஆஸ்ட்ரோலாயிடுகள் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்தார்கள் .அதன் பிறகு மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் திராவிடர்கள் . இறுதியாக ஐரோப்பியர்களுக்கு உறவான ஆரியர்கள் வந்தார்கள் .என்கிறார் .( K.M.Munshi -Fondation of Indian Culture -Bharatiya Vidya Bhavan-p.13)
ஆக இந்தியாவின் மிக பூர்வகுடிகள் நிரிட்டோக்கல்தான் .கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் இன்றும் சிறு எண்ணிகையில் நிரிட்டோக்கள் வாழ்வதாக சொல்லபடுகிறது .
உலகளவில் மனித இயல் வல்லுனரான டாக்டர் வித்யார்த்தியும் டாக்டர் குஹாவும் இந்த நிரிட்டோக்களே இந்தியாவின் பூர்வ குடிகள் என்று உறுதிப்படுத்துகின்றனர் . மேலும் "இவர்களே காடர்கள் என்றும் புலையர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர் " என்கின்றனர் .
இவர்களுக்கு பின்னர்(இரண்டாவதாக ) வந்து குடியேறியவர்கள் ஆஸ்டிரலாயிடுகள் என உறுதியாக நம்பப்படுகிறது .தெற்கு ஆசியாவில் உள்ள இவர்கள் ஆசியா முழுவதும் சிறு சிறு குழுக்களாக காணப்படுவதாக கூறப்படுகிறது .
இன்று வட இந்தியாவில் காணப்படும் கோல் சந்தாலிகள், பில்கள் ஆகியோர் இவர்களின் வம்சா வழியினரே .
பின்னர் மூன்றாவதாக இந்தியாவில் குடியேறியவர்கள் மங்கோலியர்கள் என உறுதியாக நம்பப்படுகிறது . இவர்கள் இன்றும் திபெத் ,அசாம் பர்மா , நாகலாந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர் .
இதன் பின்னர் நான்காவதாக குடியேறியவர்கள் திராவிடர்கள் . திராவிடர்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்து குடியேறி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது . கி மு 1400 இல் ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்த வேலை திராவிடர்கள் இந்தியா முழுவதும் பலுச்சிஸ்தான் முதல் பங்களா தேசம் வரையில் பரவி இருந்தனர் .
பலுசிஸ்தானில் இன்றும் பேசப்படும் பிராகுயி என்ற மொழி திராவிட மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை ஒத்து காணப்படுகிறது
இரட்(இரண்டு) ,முசிட்(மூன்று) முதலிய என் பெயர்களும் மூவிட பெயர்களும் , வாக்கிய அமைப்பும் மற்றும் சில இயல்புகளும் பிராகுயி மொழியில் இன்னும் தமிழை போலவே இருப்பதை கண்டு அறிஞர்கள் வியப்படைகிறார்கள் .
ஆதியில் சுமார் கி மு 2000 முன் இந்தியாவில் குடியேறிய திராவிடர்கள் சிறந்த முன்னேற்றமடைந்த நாகரிகத்துடன் காணப்பட்டார்கள் .இதனை அவர்களின் பேச்சு மொழி வடவங்களிலும் ,மொஹஞ்சதாரோ ,ஹரப்பா என்ற இடங்களில் நடந்த புதைபொருள் ஆராய்சிகளிலும் காண்கிறோம் .(K.M.Munshi-Foundation of Indian Culture -Bharatiya vidya bhavan p.14).
இவர்களின் நாகரிகத்தில் கோட்டைகள் ,பொது குளியல் அறைகள் ,கப்பல்கள் கட்டும் தொழில் , பல நாடுகளுடன் வியாபாரம் செய்தல் ஆகியவற்றை காணமுடிவதாக கே எம் முன்ஷி கூறுகிறார் .
ஆக இந்தியா முழுவதும் மற்றும் பலுசிஸ்தான் முதல் பங்களா தேசம் வரையிலும் திராவிடர்கள் பரவி இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன .
பழங்குடியினரின் மதங்கள்
பழங்குடியினரிடையே பல வகையான மதங்கள் காணப்பட்டிருக்கிறது ஆனால் அவற்றிற்கு எந்த வகையான பெயர்களும் வழங்கப்படிருக்கவில்லை . அந்த இனங்களின் பெயர்களிலேயே அவர்களின் மதங்களும் அழைக்கப்பட்டன .
1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் பழங்குடியின மக்கள் 59 சமயங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் இதில் சில மதங்களின் ஆதிவாசிகள் பல இலட்சம் பேராக காணப்படுகின்றனர் .
1931 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பில் சில புள்ளி விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது . மகா புருஷ தர்மம் என்ற சமயத்தை சேர்ந்த மக்கள்
4 ,85 ,000 : கபீர் பந்தி மதத்தை சேர்ந்தவர்கள் 3,89,000 பூச்சி பிரிய மதத்தில் 17,60,000 பேர் உள்ளனர் . நானக்சாகி மதத்தில் 2,41,000 பேர் உள்ளனர்.
இது தவிர ஆதிவாசிகளின் முக்கிய மதங்களில் பீல் தர்மம் ,கோண்டி தர்மம் இவைகள் ஒவ்வொன்றிலும் நாற்பது இலட்சம் பேர் உள்ளனர் .சாந்தாலி தர்மத்தில் 30 யால்ட்சம் பேர் ,மீனா முண்டா ஓராயோன் தர்மங்களில் ஒவ்வொன்றிலும் 10 இலட்சம் பேர் உள்ளனர்
1901 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒரு முக்கியமான கருத்தை கூறியுள்ளார்கள் . இந்திய தேசத்தில் உள்ள பழங்குடி மக்களில் மிக மிக பெரும்பாலோர் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் பிராமணர்களை பார்த்ததே இல்லை என்றும் அவர்களின் வேதங்களின் அதிகாரத்தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை ,காரணம் அவற்றின் பெயர்களை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள்
thanks to இன்று ஒரு தகவல்(பக்கம்)
0 comments:
Post a Comment