Tuesday, June 12, 2012

நித்தியானந்தா பெண் வேடத்தில் ஊர் ஊராகப் போகிறாரா? நித்தியானந்தா ஓடிப் போனதால் ஏமாற்றம்... மடத்தைக் காலி செய்யும் ஆதரவாளர்கள்!


கர்நாடக போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி வரும் நித்தியானந்தா, பெண் வேடத்தில் அதாவது சுடிதார் அணிந்து தப்பி வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.மேலும் அவர் சுடிதார் உடையில், மதுரை ஆதீன மடத்திற்கு நள்ளிரவில் வந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இதுகுறித்து மதுரை உளவுத்துறை போலீஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளதாம். மேலிட உத்தரவுக்காக அவர்கள் காத்துள்ளனராம். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா இருப்பது உறுதியானால், மேலிடம் பச்சைக் கொடி காட்டினால், அவரை கர்நாடக போலீஸாரிடம் பிடித்துத் தர மதுரை
போலீஸார் ஆயத்தமாக இருப்பதாக தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரை ஆதீன மடத்திலிருந்து ஒரு கார் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டுச் சென்றுள்ளது. சமயநல்லூர் அருகே புறவழிச் சாலையில், அந்தக் காரில் ஒரு சுடிதார் போட்ட பெண் ஏறினாராம். அந்தப் பெண்ணை அதிகாலையில் மதுரை ஆதீன மடத்திற்கு பின் கேட் வழியாக கூட்டி வந்துள்ளனர்.
பிறகு அவர் உள்ளே சென்றார்.மதுரை ஆதீனத்தின் அறைக்கு அவர் போயுள்ளார். அவர் வேறு யாருமல்ல, நித்தியானந்தாதான் என்று கூறுகிறார்கள். பெண் வேடமிட்டு அவர் தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சேதுபதி தங்கிய பாதாள அறையில்...?
மேலும் தற்போது நித்தியானந்தாவை மன்னர் சேதுபதி தங்கிய ரகசிய பாதாள அறையில் ஆதீனம் தங்க வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆதீனம் மட்டுமே அந்த அறைக்குப் போகிறாராம்,வருகிறாராம். வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம்.
இன்னும் எத்தனை காலத்துக்கு மதுரை ஆதீன மடத்திற்கு இந்த சோதனையோ என்று அதன் பக்தர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை, 
நித்தியானந்தா தலைமறைவாகி ஓடிப் போய் விட்டதால், பிடதி ஆசிரமத்தில் இதுநாள் வரை தங்கியிருந்த ஆண்களும், பெண்களும் மடத்தைக் காலி செய்து வருகின்றனர். 
நித்தியானந்தாவைப் பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆசிரமத்தைப் பூட்டி சீல் வைக்கவும், சோதனை நடத்தவும், ஆதாரங்களைக் கைப்பற்றவும் கர்நாடக முதல்வர் கெளடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவும் தலைமறைவாகி ஓடி விட்டார். இதனால் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆண்களும், பெண்களும் மூட்டை முடிச்சுகளுடன் மடத்தைக் காலி செய்து வருகின்றனர்.
அனைவரும் இடத்தைக் காலி செய்த பின்னர் மடத்தை அதிகாரிகள் மூடி சீல் வைப்பார்கள் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக நித்தியானந்தா மீதான புகார்கள் தொடர்பான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தா மடத்தில் தங்கியிருந்த ஆர்த்தி ராவ் என்ற நித்தியானந்தாவின் பக்தையை அவர் பாலியல் ரீதியாக சீரழித்ததாக நித்தியானந்தா மீது லேட்டஸ்டாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேள்வி கேட்கப் போய்த்தான் கன்னட சுவர்ணா டிவி சேனல் செய்தியாளரை நித்தியானந்தா ஆதரவாளர்கள் தாக்கிஅடித்து விரட்டினர் என்பது நினைவிருக்கலாம்.
thanks to asiananban

0 comments:

Post a Comment