Wednesday, June 27, 2012

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல்.




 வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பலர் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை அணுகி புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (24/06/2012) அங்கு சென்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர்கள் ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை தாக்கியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று (25/06/2012) குடிபோதையில் திரண்ட நூற்றுக்கணக்கான தமுமுக மற்றும் மமக குண்டர்கள் அப்பகுதியில் இருந்த செயல்வீரர்கள் மூன்று பேர் மீது உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி, கல், பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அப்பகுதியில் இருந்த எஸ்.டி.பி.ஐ யின் ஆதரவாளர்கள் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபரம் அறியச்சென்ற எஸ்.டி.பி.ஐ யின் நிர்வாகிகள் மீது அக்கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இதனால் எஸ்.டி.பி.ஐ இராயபுரம் தொகுதி துணைத் தலைவர் நியாமத், 48 வது வட்ட பொருளாளர் ஹபீஸ், செயல்வீரர்கள் நவ்சாத் மற்றும் நூர்தீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இராயபுரம் தொகுதி செயலாளர் கோல்டு ரபீக் மீதும் கொடுர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹபீஸ் என்பவரை தமுமுக குண்டர்கள் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அதேபோல் நூர்தீன் என்பவரை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியதில் தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்குண்டர்களே காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இருந்தும் அங்கு கூடியிருந்த தமுமுக, மம கட்சி குண்டர்கள் தொடர்ந்து குடி போதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். 

காயமடைந்து அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை நேரில் சென்று ஆருதல் கூறினார் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்


இதனைப் பார்த்த காவல்துறை மம கட்சி குண்டர்களை விட்டு விட்டு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது கடுமையான தடியடி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளை அணுகி தமுமுக, மம கட்சி குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தனர். அதேபோல் வட சென்னை மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்த 500க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் தமுமுக வினருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென தலைமையிடம் அனுமதி கோரினர். ஆனால் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்து தொண்டர்களை அமைதிப்படுத்தினர். மேலும் ஆளுங்கட்சி கூட்டணி என்ற அடிப்படையில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட கட்டப்பஞ்சாயத்து காவல்துறை மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது. குடிபோதையில் பெண்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப்பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தமுமுக வினரை அப்பகுதி மக்கள் அனைவரும் வன்மையாக கண்டித்துள்ளனர். அதேபோல் 4 பேரை அடிப்பதற்கு நூற்றுக்கணக்கில் ஆட்களை திரட்டிய தமுமுக குண்டர்களின் வீரத்தையும் பொதுமக்கள் நேரில் பார்த்தனர்.

(தமிழ முஸ்லிம் இயக்கத்தலைவர்கள் மத்தியில் நல்லுறவு இருக்கும் நிலையில், இது போன்ற தலைமைக்கு கட்டுப்படாத சில நபர்களால் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் சமூக இயக்கங்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது. எனவே தமுமுக தலைமையகம் தனது உறுப்பினர்கள் பற்றிய மறு ஆய்வு செய்யவேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment