Monday, June 4, 2012

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!



இதன் மூலம் கட்சித் தலைவர் நிதின் கட்கரியின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அத்வானி.


மதவாதம் பேசி மக்களை பிரித்து எத்தனை வருடங்களுக்கு இப்படி ஏமாற்ற முடியும்.  ராமர் பெயரை சொல்லி பாபர் மசூதியை இடிச்சாச்சி. ரத யாத்திரை முதல் பாகல் பூர், பீவாண்டி தொடங்கி மும்பை வரை பல கலவரங்களை நடத்தி ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்  என்கிற பிரிவினையை உண்டாக்கி மக்களை கூறு போட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதி, காஸ்மீர் தீவிரவாதி, கார்கில் யூத்தம் என்று பல மாய்மாலங்களை உண்டாக்கி அரசியல் நடத்தினார்கள். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்பதற்கு ஏற்ப மக்கள் விழிப்புணர்வு பெற்று பாரதிய ஜனதாவின் சுயரூபத்தை விளங்கி கொண்டார்கள். இதனால் இப்போது செல்லா காசாகி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. 

இதைத்தான் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் பல இரத்த யாத்திரைகளை நடத்திய, கலவரங்களை கண்ட தேசிய நாயகன் அத்வானி  திருவாய் மலர்ந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவாரின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். மக்கள் பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு மாற்று சக்தியாகவே முதலில் கருதி ஆதரவு கொடுத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் அவர்களை விட ஊழலில் பன்மடங்கு சிறந்து விளங்குவதோடு மற்றும் அல்லாமால் மதவாதத்தில் மூழ்கி கிடப்பதால் பாரதிய ஜனதாவை மக்கள் ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். 
thanks to sinthikkavum

0 comments:

Post a Comment