Monday, June 4, 2012

செய்திகள் அறிவோம் ----முஸ்தபா அக்காத் - ஹாலிவூட்டை அசத்திய முஸ்லிம்.





முஸ்தபா அக்காத்



"இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம்,முஸ்லிம்கள் என்று ஒரு மாயை உலகெங்கும் திரைப்படங்கள் மூலமும் செய்தி ஊடகங்கள் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் மதத்தீவிரவாதிகள் மதத்தீவிரவாதம் என்று ஒன்றை நாம் கருத வேண்டும் என்றால் அது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மீது மேட்கோள்ளப்பட்ட சிலுவைப் போரைத்தான் குறிப்பிடவேண்டும்.நான் கிறிஸ்தவத்தை குறை கூறவில்லை ஏனெனில் அந்தப் போர் சில சுயநலவாதிகளால் கிறிஸ்தவத்தின் பெயரால் மேட்கொள்ளப்பட்டதொன்றாகும்."இவ்வாறு சொன்னவர்தான் முஸ்தபா அக்காத்.

யார் இந்த முஸ்தபா அக்காத் ?



     1930 இல் சிரியாவில் அலெப்பு என்ற நகரில் பிறந்த முஸ்தபா அக்காத் சிறு வயது முதலே சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டார்.எனவே தனது கல்லூரிப் படிப்பில் சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை பாடமாக எடுத்து அமெரிக்காவில் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.பின்னர் புகழ் பெற்ற ஹாலிவூட் இயக்குனர் சாம் பெக்கின்பாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்.அந்த காலகட்டத்தில் தான் மேலை நாட்டு ஹாலிவூட் இயக்குனர்கள் இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தம் திரைப்படங்களில் சில விசமக் கருத்துக்களை புகுத்தி வந்தனர்.இந்த நிலைமை உணர்ந்த முஸ்தபா அக்காத் ஒரு முடிவுக்கு வந்தார்.இஸ்லாத்தின் உண்மையான கருத்துக்களை மேலை நாட்டவர்களுக்கு அவர்களின் பாணியில் அவர்களுக்குப் புரியும் மொழியான ஹாலிவுட்டின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்று சபதம் எடுத்தார்.அதன் விளைவு தான் உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய "தி மெஸேஜ்" திரைப்படம்.1978 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டது."தி மெஸேஜ்" திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பற்றியும் ஒரு அறிமுகத்தை மேற்குலகில் வைத்தது.இந்த திரைப்படம் பற்றி முஸ்லிம் உலகில் சாதகமாகவும் பாதகமாகவும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இஸ்லாத்தின் வரலாற்றோடு நின்று விடாமல் இஸ்லாமிய வரலாற்று நாயகர்கள் வரலாறும் வெகுஜன ஊடகங்களில் வரவேண்டும் என ஆசைப்பட்டார்.அவரின் அந்த உயரிய எண்ணத்தின் விளைவே 1980 இல் வெளியான " The Lion Of The Desert "  திரைப்படம்.லிபியாவில் ஆதிக்கம் கொண்டிருந்த முசோலினியின் இத்தாலியப் படைகளுக்கு எதிராக போராடிய உமர் முக்தாரின் வாழ்க்கை பற்றிய படமே அது.முஸ்தபா அக்காத் தனது "தி மெசேஜ்" திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது அதை நிறுத்துமாறு சவுதி அரசு கேட்டுக் கொண்டது.இதன் போது அவருக்கு நிதியியல்ரீதியாக உதவியவர் மறைந்த லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி என்பது குறிப்பிடத்தக்கது.

 உமர் முக்தார்


இப்படி தொடர்ந்த இவரின் இந்த பயணத்தின் அடுத்த தயாரிப்பாக இருந்தது இஸ்லாமிய உலகம் கண்ட ஒரு மாபெரும் தளபதி சலாஹுத்தீன் அய்யூபி பற்றிய வரலாற்றுத் திரைப்படமாகும்.கதை திரைக்கதை மற்றும் ஷூட்டிங்க்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து விட்டு திரைப்படத்தை எடுப்பதற்கான இடங்களை தெரிவு செய்ய ஜோர்டான் வந்திருந்த போது 2005 11 09 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தையும் சிலுவைப் போரின் போது கிருஸ்தவ பெயர்தாங்கிகள் செய்த அட்டூழியங்களையும் இவர் வெளிக்காட்டி விடுவார்களோ என்று பயந்து அல் கைதா என்ற முகமூடியில் அவரைக் கொன்றது உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மொஸாட்.


உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ்.அல்லாஹ் அவரின் நல்ல காரியங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.



ஒரு மேலதிக செய்தி...


ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற அந்த தொடர் குண்டுத்தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.வழக்கம் போல இதன் பலி அல் கைதாவின் மீது போடப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் பின்னணியை அலசி ஆராயும் போது இதை யார் செய்திரிப்பார்கள் என்பது தெளிவாகிவிடும்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்.
  1. முஸ்தபா அக்காத் 
  2. மேஜர் ஜெனரல் பஷீர் - பாலஸ்தீன உளவுத்துறை தலைவர்.
  3. கலோனல் ஆபித் அலூன் - பாலஸ்தீன முன்னெச்சரிக்கை படை உயரதிகாரி.
  4. ஜிஹாத் பதவ் மற்றும் மூஸா கோர்மா - பாலஸ்தீன பொருளாதார வல்லுனர்கள்.
  5. சீன இராணுவ அதிகாரிகள் 
  6. காலிப் அப்துல் மஹ்தி - ஈராக் துணை அதிபரின் சகோதரர். 
  7. அப்பாவி பாலஸ்தீனியர்கள் 
  8. அப்பாவி ஜோர்டானியர்கள் 
  
இப்போது புரிந்திருக்கும் இந்த செயலை யார்செய்திருப்பார்கள் என்று.




நன்றி 

விடியல் வெள்ளி மாத இதழ் 
விக்கிபீடியா  

0 comments:

Post a Comment