பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (பாந்திரா-வொர்லி கடற்பாலம் பிறகு) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர். இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ.
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி.கட்டுமான பொருட்கள்
பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகல் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.
இதனை கட்ட சிமெந்து 5000 டன், எஃகுஇரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது[1]. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும்[1] 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லை.
By: Arun Bala
0 comments:
Post a Comment