கெ.நித்யானந்தன் IPS (1977பாட்ச்) :- 2001-2005 காலக்கட்டத்தில் உள்துறை செயலாளர். 2005-ஆம் ஆண்டு ராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனர் ஆனார். நடந்த சம்பவங்கள் குறித்து, தவறான அறிக்கைகளை மத்திய தேர்தல் கமிஷன், தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் நீதிமன்றங்களுக்கு அளித்தார். தற்போது, கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு. | ஏ .கே.ஷர்மா IPS (1987பாட்ச்) :- இன படுகொலையின் போது, ஏராளமான குற்றங்களில் நேரடியாக பங்குபெற்றார். இவரை மாற்றாமல் தேர்தலை நடத்தமுடியாது, என மத்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, எஸ்.பி பதவியிலிருந்து மாற்றப்பட்டார். தேர்தலுக்கு பிறகு, மோடி இவரை மீண்டும் எஸ்.பியாக நியமித்தார். | |
சிவானந்த ஜா IPS (1983பாட்ச்) :- 2002-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் மாநகர கூடுதல் கமிஷனராக நியமனம். நானாவதி கமிஷனின் முன்பு மோடியை தப்பவைக்க வாக்குமூலம் அளித்தவர். 2005 பிப்ரவரியில் உள்துறை செயலாளர் ஆனார். இவரின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து சூரத் ரேஞ்ச் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். | சுதீர் கெ.சின்ஹா IPS (1976பாட்ச்) :- 2003 ஆம் ஆண்டு முதல் வதோதரா நகர போலீஸ் கமிஷனர். பெஸ்ட் பேக்கரி வழக்கில், ஷாஹிரா ஷேக்கிற்கு பணம் அளித்தும், மிரட்டியும் வாக்குமூலத்தை மாற்றச் செய்தததன் பின்னணியில் சின்ஹாவின் கரங்கள் உள்ளன. 2005 பிப்ரவரியில் சூரத் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது, சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. | |
பி.பி.பாண்டே IPS (1980பாட்ச்) :- இனப்படுகொலை நிகழ்ந்த உடனேயே, அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் பொறுப்பை ஏற்றார்.வழக்குகளை மூடி மறைப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்தார். குல்பர்க்,நரோடாபாட்டியா வழக்குகளில் தில்லு முல்லு செய்தார். அஹ்மதாபாத் மாநகர க்ரைம்ப்ராஞ்ச் தலைவராக பதவி வகிக்கும் வேளையில்தான், பெரும்பாலான போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. பின்னர் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார். | ஆஷிஷ் பாட்டியா(1985பாட்ச்):- பி.பி.பாண்டேவுக்கு பிறகு, அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக பதவியேற்றார். டி.ஜி.வன்சாராவுடன் ஏராளமான தாக்குதல்களில் பங்காளியானார். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின், ஆதாரங்களை அழித்த அதிகாரிகளை காப்பாற்ற முயன்றார். தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகளும் மூடப்பட்டதன் பின்னணியில் பங்கு வகித்தார். |
0 comments:
Post a Comment