சவூதி அரேபியாவின் புனித மக்கா நகருக்கு இந்த வருடம் வேலை வாய்ப்பு நிமித்தம் வந்த 23,000 வெளிநாட்டவர்களில் 78 பேர் பாலியல் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கா மாநகராட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
மக்கா நகரின் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், தேநீரகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்த வருடம் சுமார் 23,000 பணியாளர்கள் வந்ததாகவும், சவூதி மருத்துவச் சோதனையில் அவர்களில் 78 பேருக்கு பாலியல் தொற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர். முஹம்மது அமீன் ஹாஷிம் அல் ஃபவ்தாவி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் குடியுரிமை அட்டை (Iqama) வழங்கப்படுவதற்கு முன்பாகவே திருப்பப்பட்டனர் என்றார் அவர்.

பணி பொருட்டு நுழைமதி (VISA)க்கு விண்ணப்பிக்கும் போதே அவரவரும் தங்கள் நாட்டில் மருத்துவச்சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது நியதி என்ற போதிலும், ஊரில் சான்று பெற்று வந்தாலும், சவூதி அரசின் மருத்துவச் சான்றில் தகுதியுள்ளவராகக் கண்டறியப்பட்டாலே வெளிநாட்டவருக்கு பணி அனுமதி வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment