Monday, November 28, 2011

பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் - அமெரிக்காவை வெறியேற உத்தரவு


பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் யூசுப் ராசா கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள், ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது. மேலும், பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
yarlmuslim

0 comments:

Post a Comment