Monday, January 9, 2012

அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு

ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது. இதையடுத்து புகுஷிமா டச்சி அணு உலை வெடித்தது.
இதனால் அங்கிருந்து கதிர்வீச்சு பரவி ஆபத்தை ஏற்படுத்தியதால், உலகம் முழுவதும் அணு உலை மீதான சர்ச்சை எழுந்தது. எனவே ஜப்பான் அணு உலை கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
சுனாமியால் சேதம் அடைந்த புகுஷிமா அணு உலை 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள பிருகா மற்றும் மிகாமா உலைகள் 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவை தங்கள் உற்பத்தியை தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே இவற்றின் உற்பத்தியை நிறுத்தி விட்டு அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த முடிவை மேற்கொள்ளும் பட்சத்தில் 54க்கும் மேற்பட்ட அணு உலைகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு அழிக்கப்படும். பல பரிசோதனைகளுக்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த பழமையான அணு உலைகளை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
thanks to newsonews.com

0 comments:

Post a Comment