Thursday, January 12, 2012

வேலையில்லா திண்டாட்டத்தால் அன்டார்டிகாவுக்கு செல்லும் பிரிட்டன் இளைஞர்கள் ?


பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வேலைக்காக பூமியின் தென்கோடியில் உள்ள அன்டார்டிகாவுக்குக் கூட செல்ல, அந்நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். 
பிரிட்டனில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில், லண்டனில் துவங்கிய இளைஞர்களின் கலவரத்திற்கு வேலையின்மையும் ஒரு காரணம் என அரசின் அறிக்கை தெரிவித்திருந்தது. இந்நிலையில், அன்டார்டிகாவில் நடந்து வரும் பல்வேறு பணிகளுக்காக, பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே என்ற அரசு சார் நிறுவனம் ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில், பிளம்பர், எலக்ட்ரீஷியன், சமையல் நிபுணர்கள், மர வேலை பார்ப்போர் என, மொத்தம் 36 பணியிடங்களுக்கு விளம்பரம் அளித்திருந்தது. இந்த வேலைகளுக்கு அடிப்படை சம்பளம் 23 ஆயிரத்து 700 பவுண்டு வழங்கப்படும். அதோடு, உணவு, தங்குமிடமும் இலவசமாக தரப்படும். இந்த, 36 பணியிடங்களுக்காக பிரிட்டன் முழுவதிலும் இருந்து 3,000 பேர் விண்ணப்பத்திருந்தனர். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், அதன் விளைவான வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை தான், இவ்வளவு விண்ணப்பங்கள் வரக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment