Wednesday, January 18, 2012

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: இஸ்ரேல் ஆதரவு !..

பாதுகாப்புத்துறை சார்ந்த பொருள் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட  இந்தியா,இஸ்ரேல் உறுதி...
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க இஸ்ரேல் முழு ஆதரவு தெரிவிக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிமோன் பெரஸ் தெரிவித்தார்.இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொண் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வரவேற்று அளித்த விருந்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியது: இந்தியாவை அடியொற்றி மிகுந்த அக்கறையுடன் இஸ்ரேல் செயல்படுகிறது.இஸ்ரேலைப் பொருத்தவரை அனைத்து கலாசாரங்களுக்கும் இந்தியாதான் முன்னோடி. இதற்கு அடுத்தபடியாக எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வறுமையை ஒழித்த மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற மதிப்பும் இந்தியா மீது உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை இந்தியா பெற வேண்டும் என்று இஸ்ரேல் பெரிதும் விரும்புகிறது என்று பெரஸ் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி பிறந்த மண் இந்தியா. அரசர்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. இவ்விருவரும் ஒரே மண்ணில் பிறந்தது மிகவும் அபூர்வ நிகழ்வு. அத்தகைய பெருமையை, கெüரவத்தை இந்தியா பெற்றுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டினார்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவின் கலாசாரமும், பாரம்பரியமும் பெருமை வாய்ந்தது. அதனாலேயே இந்தியாவுடனான உறவை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறோம்.

இந்த உலகில் இந்தியாவும் சீனாவும் இல்லாமல் வறுமையை, ஏழ்மையை ஒழித்திருக்க முடியாது என்று பெரஸ் சுட்டிக் காட்டினார். இவ்விரு நாடுகளும் இருந்திராவிட்டால், இந்த உலகை பசிக் கொடுமைதான் ஆட்சி செய்து கொண்டிருக்கும் என்றார். கடந்த 20 ஆண்டுகளில் பெரஸ் இரண்டு முறை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியான பெரûஸ சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாக தனது ஏற்புரையில் கிருஷ்ணா சுட்டிக்காட்டினார். 



பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேல் சென்றுள்ள முதலாவது வெளியுறவு அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கிருஷ்ணா இருதரப்பு உறவு குறித்து மேலும் பேசியது: உணவு உற்பத்தியில் இஸ்ரேல் சுயச் சார்பை எட்டிவிட்டது. இது இந்தியாவைக் கவர்ந்த விஷயங்களில் முக்கியமானது. 1992 மற்றும் 2002-ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெரஸ், இரு நாடுகளிடையிலான உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகள் சிறந்த பலனை அளித்துள்ளன. அடுத்த தலைமுறையினருக்காக இரு நாடுகளின் தலைவர்களும் சிந்தித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது. இதற்காகத் தான் இஸ்ரேல் வந்துள்ளதாக கிருஷ்ணா குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் வளர்ச்சி அது சந்தித்த போர், அதன் மூலம் பெற்ற படிப்பினைகள் அந்நாட்டை மென்மேலும் உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, ஒவ்வொரு போரின் மூலமும் வலுவான நாடாக இஸ்ரேல் வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். இதனாலேயே பிற நாடுகள் இஸ்ரேலை மிகுந்த மரியாதையுடன் நோக்குகிறது என்றார்.

இரு நாடுகளிடையிலான உறவு பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகி வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உறவு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும். இப்போது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா.
 
இஸ்ரேலுடன் பாதுகாப்புத்துறை சார்ந்த பொருள் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை இரு நாடுகளும் இணைந்து ஒழிப்பது குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக பேச்சு நடத்த உள்ளனர்.
 இந்த சம்பவத்தினால் இந்தியா கொடூரத்தின் வடிவில் உள்ள 'இஸ்ரேல்' உடன் இந்த ஒபந்தத்தை போடுவது இந்தியா தன் மீதே மண்ணை வாரி போடுவது போல் உள்ளது ........

0 comments:

Post a Comment