Monday, January 16, 2012

பாதுகாப்பானது எது? ஜல்லிகட்டா & வெடி வெடிப்பதா!






*  உழவர்களின் பெருமையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு சொல்லும் தமிழர்களின் மகத்தான திருநாள்தான்  தை பொங்கல்.

*  பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் கலாச்சாரத்தையும், வீரத்தையும்  வெளிப்படுத்தும் ஒரு வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு
போன்றவைகள் ஆகும்.    

*  சிந்து சமவெளி நாகரிகங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு" 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை" வாய்ந்தது. இது தமிழகத்தில் மற்றும் இன்றி "ஸ்பெயின், போர்ச்சுக்கல்" போன்ற நாடுகளிலும் இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது. 

* தமிழர்களின் காதலையும் வீரத்தையும் பதிவு செய்துள்ள அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில்  "ஏறுதழுவுதல்" என்ற பெயரில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.  
சிந்திக்கவும்: கடந்த சில வருடங்களாக இதை எதிர்த்து சிலர் வழக்குகள் தொடர்வதும் நீதிமன்றங்கள் தடை விதிப்பதும், மீண்டும் தடை விளக்குவதும் தொடர்கிறது. 


அதே நேரம் மனிதவதையை பற்றி கவலைப்படாத சில ஜென்மங்கள் அதுதான் ஐயா நம்ம'புளூ கிராஸ்' பணக்கார கோட்டான்கள் இந்த மாடுகளுக்காக குரல் கொடுப்பதும் வேடிக்கை ஆகிவிட்டது.

எதிர்பவர்கள் சொல்லும் காரணங்களில்  மாடு முட்டி உயிர் பலி ஏற்படுகிறது என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதை தவிர்க்க விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து 
பங்குபெறுமாறு அரசு இந்த விளையாட்டை முறை படுத்தவேண்டும் அதை விட்டு விட்டு தடை என்று சொல்வது தமிழர்களின் வரலாற்றை அழிக்க நினைக்கும் சதியாகும்.

பாரம்பரியாமாக நடத்தப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டை தடை செய்யும் இவர்கள் அண்டை மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீபாவளியில் வெடி வெடிப்பதின் மூலம், அதை தயாரிப்பதன் மூலம் எத்தனை  உயிர்கள் போகிறது 
என்பதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதேன். சுற்றுப்புற சூழலால் மாசுபடுவதோடு வெடிவிபத்தில் நூற்றுகணக்கில் உயிர்கள் பலியாகின்றன. 

எப்படி வடநாட்டு ஆரிய ராமரை தமிழ் நாட்டில் கொண்டு வந்து நுளைத்தார்களோ அதுமாதிரிதான் இப்போது தீபாவளியும் ஆகி விட்டது. பொங்கலை கொண்டாடுவதின் முக்கியத்துவம் குறைந்து தீபாவளி தூக்கி பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிகட்டை தடை செய்ய நினைக்கும் நீதிமன்றங்கள் வெடி விசயத்தில் மவுனம் சாதிப்பதேன். தமிழர் பண்பாடு காக்கப்படவேண்டும். வந்தேறி ஆரிய பண்பாடுகள் தமிழ் நாட்டில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

மனிதர்கள் இறப்பதில் யாருக்கும் அக்கறை இல்லை! 
மாடுகள் இறப்பதில்தான் அக்கறை இருக்கிறது. 
                         *மலர்விழி*  
thanks to sinthikkavum.net

0 comments:

Post a Comment