Monday, January 16, 2012

மெரினா கடற்கரை அருகே எழிலகத்தில் பயங்கர தீ விபத்து ?



சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதில் ஒருவர் பலியாக 3 பேர் காயமடைந்தனர்.


இந்தத் தீயில் அரசு அலுவலகங்களின் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. எனவே, இது விபத்தா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதியா என சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம், பொங்கல் நாள் விடுமுறையை ஒட்டி, அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை என்பதால் எழிலகக் கட்டிடமே வெறிச்சோடியிருந்தது. இரவில் தங்கி பணிபுரியும் பணியாளர்களும் இல்லாத நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் காவலர்கள் யாரேனும் இருந்தார்களா; வெளி நபர்கள் நடமாட்டம் இருந்ததா என்கின்ற ரீதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் தொழில் வணிக வரி அலுவகம் பக்கத்தில் இருந்து கிளம்பிய தீ, பின்னர் சமூக நலத்துறை அலுவலகம் அருகே பரவியுள்ளது.

இதை அடுத்து, தகவல் அறிந்ததும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். தீ அதிக அளவில் பரவியதால், 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் இதில் பலியாகியுள்ளார். மேலும் தீயணைப்பு அலுவலர் மற்றும் வீரர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment