Thursday, January 19, 2012

வெள்ளை மாளிகைக்குள் புகை குண்டு வீச்சு !


 வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது புகை குண்டு வீசப்பட்டதையடுத்து, அந்த கட்டடம் தாற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தின் மையமான வால்ஸ்ட்ரீட்டை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில் நேற்றிரவு வெள்ளை மாளிகையின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஒட்டிய உள் பகுதியில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் உளவுப் பிரிவினரும் அங்கு விரைந்து சோதனையிட்டபோது யாரோ புகை குண்டை உள்ளே வீசியது தெரியவந்தது.

குண்டு உடனடியாக அகற்றப்பட்டாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை உடனடியாக மூடப்பட்டது.

நேற்று அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேலின் பிறந்த நாள் என்பதால், சம்பவம் நடந்தபோது அவரது குடும்பத்தினர் ஒரு ஹோட்டலுக்கு டின்னருக்கு சென்றிருந்தனர்.

இந்த குண்டுவீச்சு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே வெள்ளை மாளிகை திறக்கப்பட்டது.

0 comments:

Post a Comment